பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி (ITR) பிரான்ஸ்-இலங்கை பணிப்பாளரும் யாழ், தீவகம் வேலணை மேற்கு சரவணையைச் சேர்ந...
பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி (ITR) பிரான்ஸ்-இலங்கை பணிப்பாளரும் யாழ், தீவகம் வேலணை மேற்கு சரவணையைச் சேர்ந்தவரும் ஈழத்து ஈகையாளனுமான,திரு விசுவாசம் செல்வராசா (பிரான்ஸ்)அவர்களின் நெறிப்படுத்தலில் ஊர்காவற்துறை பிரதேச பகுதியில் வசிக்கும் வறிய நிலை, இருபத்தைந்து குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக குடும்பம் ஒன்றிற்கு இரண்டாயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வுக்கு நிதி அனுசரணையினை பூமணி அம்மா அறக்கட்டளையின் தீவிர ஆதரவாளர்களும் சர்வதேச தமிழ் வானொலியின் தீவிர அபிமானிகளுமான வேலணையூரைச் சேர்ந்தவர்களும் தற்போது கனடா,மொன்றியலில் வசிப்பவர்களுமான,திரு/திருமதி இராசா பாலேந்திரன்,சித்திரா அவர்களின் நிதிப் பங்களிப்பில் பூமணி அம்மா அறக்கட்டளையால் இன்று இவ் உதவித் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.குறித்த நிகழ்வானது, ஊர்காவற்துறை நீதிமன்ற,சிறுவர் நன்நடத்தை பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர்(DO)செல்வி லீனஸ் யூட்ஸி தலைமையில் நடைபெற்றதுடன்,இன்றைய நிகழ்வில்,நிகழ்விற்கான,நிதிக் கொடையாளர்களுடன் அறக்கட்டளையின்
இலங்கைக்கான,செயலாளரும்,முன்னாள்,வலிகாமம் தெற்கு பிரதேசசபை,யாழ் மாநகரசபை,வட மாகாணசபை உறுப்பினருமான கௌரவ கலாநிதி ந.விந்தன் கனகரட்ணம்,அறக்கட்டளையின் ஆலோசகர் இ.மயில்வாகனம்,நிர்வாகசபை உறுப்பினரும்,பொறியியலாளருமான சா.தவசங்கரி,ஓய்வு நிலை ஆசிரியர் திரு கிறிஸ்தோத்திரம் லீனஸ் ஆகியோரும் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்து உதவிப் பொருட்களை வழங்கி வைத்தனர்.