பொன்னாலை ஊடாக கடத்தப்பட்ட பெருந்தொகையான கஞ்சா அப்பகுதிய இளைஞர்கள் மற்றும் பொதுமக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டது. கடத்தப்பட்ட கஞ்சா சுமார் 35...
பொன்னாலை ஊடாக கடத்தப்பட்ட பெருந்தொகையான கஞ்சா அப்பகுதிய இளைஞர்கள் மற்றும் பொதுமக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டது.
கடத்தப்பட்ட கஞ்சா சுமார் 350 தொடக்கம் 400 கிலோகிராம் வரை இருக்கும் என நம்பப்படுகிறது.
கஞ்சா கடத்தியவர்களில் ஒருவரும் பிடிக்கப்பட்டார். ஏனையவர்கள் தப்பியோடியுள்ளனர்.
பிடிபட்டவர் பண்டாரவளையை சேர்ந்தவர் எனவும் பண்டத்தரிப்பு – மாதகல் பிரதேசத்தில் திருமணம் செய்தவர் எனவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவித்தார்.
பொன்னாலை பறவைக்கடல் ஊடாக கடத்திவரப்பட்ட கஞ்சா, பொன்னாலைச் சந்திக்கும் வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்கும் இடையில் வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனத்தில் ஏற்றப்பட்டபோதே சிக்கியது.
குறித்த வாகனத்தின் செயற்பாட்டில் சந்தேகமடைந்த இளைஞர்கள் அதை சோதனையிட முற்பட்டபோதே கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த விடயம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வருகைதந்த பொலிசாரிடம் வாகனத்துடன் கஞ்சாவும் ஒப்படைக்கப்பட்டது. பிடிபட்ட நபரும் கையளிக்கப்பட்டார்.