இந்த வருடம் மன்னார் – மடு மாதா திருவிழா கூட்டுத் திருப்பலிப் பூஜை இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றது. திருவிழா திருப்பலி ஒப்புகொடுக்கப்ப...
இந்த வருடம் மன்னார் – மடு மாதா திருவிழா கூட்டுத் திருப்பலிப் பூஜை இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றது.
திருவிழா திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டதை அடுத்து மடுமாதாவின் திருச்சுரூப பவனி இடம்பெற்றது. வருடாந்த மடுமாத திருவிழாவில் நாட்டின் பலபாகங்களில் இருந்தும் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதில் இணைந்து கொண்டமை விசேட அம்சமாகும்.
இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க பிரதிநிதி அதி வண. பிரையன் உடைக்வே ஆண்டகை,மன்னார் ஆயர் கலாநிதி அதி வண. இமானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை, இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி மன்றத் தலைவர் கலாநிதி சந்ரா பெர்ணான்டோ உள்ளிட்ட அருட்தந்தையர்கள், கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, அமைச்சர் நளீன் பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர்கள் அருந்திக பெர்னாண்டோ, காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன, செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் பெருந்திரளான பக்தர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.