யாழ்ப்பாணம் நல்லூர் மற்றும் குருநகர் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபானங்களை உடமையில் வைத்திருந்து விற்பனையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சா...
யாழ்ப்பாணம் நல்லூர் மற்றும் குருநகர் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபானங்களை உடமையில் வைத்திருந்து விற்பனையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாண பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கீழ் இயங்கும் புலனாய்வு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் சந்தேக நபர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.
போயா தினமான நேற்று மதுபானங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
நல்லூர் பகுதியில் கைது செய்யப்பட்ட 28 வயதான சந்தேக நபரிடமிருந்து 10 போத்தல் சாராயம் மற்றும் 12 லீற்றர் கசிப்பு என்பன மீட்கப்பட்டுள்ளது.
குருநகர் பகுதியில் கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 25 போத்தல் சாராயம் என்பவனவும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதான இரண்டு சந்தேக நபர்களும் சாராய போத்தல்களும் மேலதிக நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.