யாழ் நகர்ப் பகுதி முச்சக்கர வண்டித் தரிப்பிடத்தில் இருந்து கட்டணமானி பொருத்தாத முச்சக்கர வண்டிகளை அகற்றும் நடவடிக்கையை யாழ்ப்பாணம் பொலிஸ் நி...
யாழ் நகர்ப் பகுதி முச்சக்கர வண்டித் தரிப்பிடத்தில் இருந்து கட்டணமானி பொருத்தாத முச்சக்கர வண்டிகளை அகற்றும் நடவடிக்கையை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
யாழ் மாவட்டத்தில் வாடகைக்கு செலுத்தும் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டணமானி பொருத்தாமையினால் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணங்கள் அதிகளவில் வசூலிக்கப்படுவதாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் யாழ் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து கட்டணமானி பொருத்தாக முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டாது என யாழ் மாவட்ட செயலர் அ.சிவபாலசுந்தரன் கடந்த இரண்டு மாத காலத்திற்கு முன்னரே அறிவித்து , இரண்டு மாத கால அவகாசம் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு வழங்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.