ஈழத்தின் புகழ் பூத்த இலங்கை வானொலி அறிவிப்பாளராகவும் பிபிசி தமிழோசை அறிவிப்பாளாராகவும் கடமையாற்றிய விமல் சொக்கநாதன் லண்டனில் ஏற்பட்ட விபத்த...
ஈழத்தின் புகழ் பூத்த இலங்கை வானொலி அறிவிப்பாளராகவும் பிபிசி தமிழோசை அறிவிப்பாளாராகவும் கடமையாற்றிய விமல் சொக்கநாதன் லண்டனில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி அகால மரணமடைந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
“இலங்கை வானொலி வர்த்தக சேவை நேயர்களின் ஏகோபித்த அபிமானத்தை வென்றெடுத்த-லண்டனில் இருந்து முழங்கி வந்த தமிழோசையில் செய்தி வாசித்ததால் தரணியெங்கும் புகழ் அடைந்த நண்பர் விமல் சொக்கநாதன் மரணம் என்னை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சொல்லொனாத் துயரம்” என இலங்கை ஒலிபரப்பு துறையின் முன்னோடி வி.என்.மதியழகன் தனது முகநூலில் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
விமல் சொக்கநாதன் மறைவுக்கு பலரும் சமூக ஊடகங்களின் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
விமல் சொக்கநாதன் அண்மையில் இலங்கைக்கு விஐயம் செய்து தனது நூல் வெளியீட்டுவிழாவில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.