கந்தானையில் அமைந்துள்ள இரசாயன தொழிற்சாலையில் இன்று காலை தீ பரவியுள்ளது. தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...
கந்தானையில் அமைந்துள்ள இரசாயன தொழிற்சாலையில் இன்று காலை தீ பரவியுள்ளது.
தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீயை அணைக்க இரண்டு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கந்தானை இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயினால் ஏற்பட்ட புகை காரணமாக 20 பாடசாலை மாணவர்கள் சுவாசக் கோளாறுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என ராகம வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.