தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டினால் கடந்த 11 மாதங்கள் தான் பெரும் கஷ்டங்களை அனுபவித்ததாகவும் மீண்டும் விளையாடுவதற்கு வாய...
தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டினால் கடந்த 11 மாதங்கள் தான் பெரும் கஷ்டங்களை அனுபவித்ததாகவும் மீண்டும் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் வரை காத்திருப்பதற்கான பொறுமை தன்னிடம் இல்லை என்றும் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்க தெரிவித்தார்.
தனுஷ்கவுக்கு எதிரான வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்க அவுஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் அவுஸ்திரேலிய ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடைசி 11 மாதங்களில் பல இன்னல்களிற்கு முகங்கொடுத்ததாகவும் தன்னோடு இருந்த அனைவருக்கும் நன்றி. தனது பழைய வாழ்க்கை மீண்டும் கிடைத்துவிட்டது. மீண்டும் கிரிக்கெட் அணியில் இணைந்து விளையாடும் வரை என்னால் பொறுமையாக இருக்க முடியாது.
எனவே, மீண்டும் இலங்கை அணிக்காக விளையாட தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.