முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கொழும்பு மேல் நீதிமன்றால் இன்று (22) பிணையில் விடுவிக்கப்பட்டார். இது தொடர்பில் தெரி...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கொழும்பு மேல் நீதிமன்றால் இன்று (22) பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் திலீபனின் 33 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, 2020 ஆம் ஆண்டில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்ட குற்றச்சாட்டுக்காகவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வினை தடுக்கும் வகையில் யாழ்ப்பாணம் நீதிமன்றம் அப்போது தடை உத்தரவு பிறப்பித்திருந்து.
இருந்த போதிலும் நீதிமன்ற உத்தரவினை மீறி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இந்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவினை அவமதித்த குற்றச்சாட்டுக்காக சிவாஜிலங்கத்தை கைது செய்யுமாறு கொழும்பு, மேல் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த வழக்கு இன்று கொழும்பு, மேல் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு வந்த போது, குற்றம்சாட்டப்பட்ட சிவாஜிலிங்கம் தமது சட்டத்தரணிகளினூடாக நீதிமன்றில் சரணடைந்தார்.
இதன்போது, சிவாஜிலிங்கத்துக்கு எதிரான பிடியாணை உத்தரவு திரும்பப் பெறப்பட்டதுடன், பிணையில் விடுவிக்கப்பட்டார்.