புத்தல பகுதியை அண்மித்து நிலஅதிர்வொன்று பதிவாகியுள்ளது. இந்த நிலஅதிர்வு நேற்றிரவு 11:20 அளவில் ஏற்பட்டதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணி...
புத்தல பகுதியை அண்மித்து நிலஅதிர்வொன்று பதிவாகியுள்ளது.
இந்த நிலஅதிர்வு நேற்றிரவு 11:20 அளவில் ஏற்பட்டதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவிக்கின்றது.
குறித்த நிலஅதிர்வு 2.4 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாகவும் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பூமிக்குள் சுமார் ஒரு கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளது.
எனினும், சேதங்கள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.