தியாக தீபம் திலீபனின் நினைவஞ்சலியானது இன்று (26) திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் இடம் பெறவிருந்த நிலையில் நீதிமன்றம் ஊடாக திருகோணமலை து...
தியாக தீபம் திலீபனின் நினைவஞ்சலியானது இன்று (26) திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் இடம் பெறவிருந்த நிலையில் நீதிமன்றம் ஊடாக திருகோணமலை  துறைமுக பொலிசாரால் குறித்த நிகழ்வுக்கு தடை விதிக்கப்பட்டது.
குறித்த தடையினை  நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் ஆறு நபர்களின் பெயர்களின் விபரங்கள் அடங்கிய தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததுடன், திருகோணமலை துறை முகப் பொலிஸார் தடை விதித்தனர்.
இதனை தொடர்ந்து குறித்த மண்டபத்தில் கூடியிருந்தவர்கள் கதிரைக்கு மலர் மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினர்.

 

 
							     
							     
							     
							    
 
 
 
 
 
