மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு தொகையொன்றை வழங்கும் வேலைத்திட்டமொன்றை ...
மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு தொகையொன்றை வழங்கும் வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் போக்குவரத்து பாதுகாப்பு பிரிவு இந்த தீர்மானத்தை எட்டியுள்ளது.
இதன்படி, இந்த திட்டத்தை எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தமது சம்பளத்திற்கு மேலதிகமாக 5000 ரூபா கொடுப்பனவு வழங்க்பபடவுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மாஅதிபர் இந்திக்க ஹபுகொட தெரிவித்துள்ளார்.
அதற்கு மேலதிகமாக கைது செய்யப்படும் பட்சத்திற்கு 5000 ரூபா அல்லது அதற்கு மேல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
வாகன விபத்துக்களை தவிர்த்துக்கொள்வதற்காகவும், பொலிஸ் உத்தியோகத்தர்களை ஊக்கப்படுத்தும் நோக்கிலும் இந்த திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.