உடன் அமுலுக்குவரும் வகையில் இலங்கைக்குள் விஸா இன்றி 7 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு பிரவேசிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சுற்று...
உடன் அமுலுக்குவரும் வகையில் இலங்கைக்குள் விஸா இன்றி 7 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு பிரவேசிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது ட்விட்டர் தளத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மார்ச் 31ஆம் திகதி வரை இந்தச் சலுகை வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு விசா இன்றி நாட்டிற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படுகிறது.