990 கோடி ரூபா மோசடி செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சந்தேகதநபர் நேற்றைய தினம் கைது ...
990 கோடி ரூபா மோசடி செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதியின்றி கண்டி பிரதேசத்தில் நிதி நிறுவனமொன்றை நடாத்தி சென்றதன் ஊடாக இந்த மோசடி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
நிதி மற்றும் வணிக குற்றத் தடுப்பு பிரிவினரால் இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குறித்த நிறுவனத்தில் பணிப்பாளராகவும், பங்குதாரராகவும் கடமையாற்றியுள்ளார்.
சந்தேகநபரை நீதிமன்றத்தில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.