யாழ். போதனா வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் நபர் ஒருவருடன் முரண்பட்டு அவரை மிக மோசமாக தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள...
யாழ். போதனா வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் நபர் ஒருவருடன் முரண்பட்டு அவரை மிக மோசமாக தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இணைந்து நபரை கீழே தள்ளி விழுத்தி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில், யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் தாக்குதலுக்கு இலக்கான நபரையும், தாக்குதல் மேற்கொண்ட பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் இருவரையும் கைது செய்து விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்
சம்பவம் தொடர்பில் போதனா வைத்திய சாலை பணிப்பாளரிடம் முறையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ். போதனா வைத்தியசாலைக்கு மதுபோதையில் வந்த நபர் அநாகரிகமாக நடந்து கொண்டு, பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு தாக்குதலை மேற்கொண்டு வைத்தியசாலைக்குள் செல்ல முற்பட்ட போதே பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள், அந்நபர் மீது தாக்குதலை மேற்கொண்டனர் என பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் தரப்பு தெரிவிக்கின்றது.