வருடாவருடம் இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவினரால் (Sri Lanka Inventors Commission) நடாத்தப்படும் பாடசாலை மாணவருக்கான ”சஹசக் நிவமும்” (Sahasa...
வருடாவருடம் இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவினரால் (Sri Lanka Inventors Commission) நடாத்தப்படும் பாடசாலை மாணவருக்கான ”சஹசக் நிவமும்” (Sahasak Nimavum ) எனும் பெயரில் நடத்தப்படும் தேசிய புத்தாக்கப்போட்டியின் 2022 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா நேற்று(26) கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை மாணவி ரூபிகா அருந்தவம் வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றுபெருமை சேர்த்துள்ளார்.
இதே மாணவி 2021 ஆம் ஆண்டில் குறித்த போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும், 2020 ஆம் ஆண்டில் வெண்கலப் பதக்கத்தையும் பெற்ற ஒர் வளர்ந்து வரும் புத்தாக்குனருமாவார்.
குறித்த மாணவி சப்புரகமுவா பல்கலைக் கழகத்தின் விவசாய விஞ்ஞான பீடத்தினரால் வருடந்தம் தேசியரீதியில் பாடசாலை மாணவருக்கிடையே நடத்தப்படும் புத்தாக்கப் போட்டியான Agri Food innova போட்டியிலும் கடந்த இரண்டு வருடங்களாகப் பங்குபற்றி பதக்கங்களையும் சான்றிதழ்களையும் பெற்றும் வருகிறமையம் குறிப்பிடத்தக்கதாகும்.