பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை, தியத்தலாவ, பண்டாரவளை, வெலிமடை, எல்ல, பசறை ஆகிய பகுதிகளில் இன்று (18) காலை முதல் கடும் பனிமூட்டம் காணப்படுவதாக...
பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை, தியத்தலாவ, பண்டாரவளை, வெலிமடை, எல்ல, பசறை ஆகிய பகுதிகளில் இன்று (18) காலை முதல் கடும் பனிமூட்டம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பனிமூட்டம் காணப்படுவதால், புகையிரத பாதைகளை கடக்கும் போது அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு சாரதிகளை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அதன்படி, வாகனத்தை ஓட்டும் போது மின்விளக்குகளை ஒளிரவிட்டுக் கொண்டு, ஹாரன் ஒலித்துக்கொண்டு செல்லவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.