யாழ் பல்கலை மாணவர்கள் கடும் எதிர்ப்பு! சட்டத்தரணி சுவஸ்திகாவின் கருத்தரங்கு நிறுத்தம் மாணவர்களின் எதிர்ப்பையடுத்து சர்சைக்குரிய சட்டத்தரணி ச...
யாழ் பல்கலை மாணவர்கள் கடும் எதிர்ப்பு! சட்டத்தரணி சுவஸ்திகாவின் கருத்தரங்கு நிறுத்தம்
மாணவர்களின் எதிர்ப்பையடுத்து சர்சைக்குரிய சட்டத்தரணி சுவஸ்திகாவின் கருத்தரங்கு நிறுத்தப்பட்டது.
இன்றைய தினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையினரின் ஏற்பாட்டில் சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் வளவாளராக பங்குபற்றும் கருத்தரங்கு ஏற்பாடுசெய்யப்பட்டது.
இந் நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் கடுமையான எதிர்ப்பினையடுத்து குறித்த கருத்தரங்கு இடைநிறுத்தப்பட்டது.
அண்மையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்குபற்றிய சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் தமிழீழ வுடுதலைப் புலிகள் அமைப்பு பாசிச அமைப்பு என தெரிவித்துருந்தார்.
இவரது கருத்திற்கு பல்வேறு தரப்புகளும் கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர் இந் நிலையில் இன்றைய தினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையின் ஏற்பாட்டில் சட்டத்தரணி சுவஸ்திகா பங்கு பற்றும் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்திய நிலையில் குறித்த நிகழ்வு நிறுத்தப்பட்டுள்ளது.