“உதயன்” பத்திரிகையின் ஆசிரியர் த.பிரபாகரன் இன்று பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். 2020ஆம் ஆ...
“உதயன்” பத்திரிகையின் ஆசிரியர் த.பிரபாகரன் இன்று பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
2020ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் ஒளிப்படத்துடன், அவரது பிறந்தநாள் தொடர்பான செய்தி பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டமை தொடர்பாகவே பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.
மாவீரர் தினமான இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்ட அவரிடம் சுமார் 4 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.