நாடு முழுவதும் உள்ள அரச வைத்தியசாலைகளை உள்ளடக்கிய வகையில், மாகாண மட்டத்தில் அடையாள பணிப் பகிஷ்கரிப்பை இன்று முதல் ஆரம்பிப்பதாக அரச வைத்திய அ...
நாடு முழுவதும் உள்ள அரச வைத்தியசாலைகளை உள்ளடக்கிய வகையில், மாகாண மட்டத்தில் அடையாள பணிப் பகிஷ்கரிப்பை இன்று முதல் ஆரம்பிப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது.
சுகாதார கட்டமைப்பு சீர்குலையாத வகையில் அல்லது சாதாரண நிலைமையில் நடாத்தி செல்வதற்காக நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்களை தடுத்து நிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப் பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்படுவதாக அந்த சங்கம் குறிப்பிடுகின்றது.
இதன்படி, ஊவா மாகாணத்தில் இன்று காலை 8மணி முதல் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு இந்த அடையாள பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்க்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.