யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்தவரை சுமார் 65 பேர் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச எ...
யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்தவரை சுமார் 65 பேர் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச எயிட்ஸ் தினமான இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வடபிராந்திய பாலியல் நோய் தடுப்பு சிகிச்சை நிலைய வைத்திய நிபுணர் வைத்தியர் ஏ.றொகான் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் தற்போது எயிட்ஸ் நோயால் 5500 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் அதிலே வடக்கு மாகாணத்தை எடுத்துக் கொண்டால் 90 பேர் இன்று வரைக்கும் எச்ஐவி தொற்று உள்ளவர்கள் என இனங்காணப்பட்டுள்ளார்கள்
அதில் யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை சுமார் 65 பேர் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்
ஒவ்வொரு ஆண்டும் எயிட்ஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சராசரியாக கூடிக் கொண்டு போகின்றது
யாழ்ப்பாணத்தில் கடந்த வருடம் 3 பேர் புதிதாக இனம் காணப்பட்டார்கள். இந்த ஆண்டு நான்கு பேர் அடையாளம் காணப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்குரிய சிகிச்சைகள் யாழ்ப்பாண போதனா வைத்திய சாலையில் வழங்கப்படுகிறது என்றார்.