யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியில் இரண்டு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். 50 கிராம் கஞ்சா கலந்த மாவாவை உடைமையில் வைத்திருந்த...
யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியில் இரண்டு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
50 கிராம் கஞ்சா கலந்த மாவாவை உடைமையில் வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இருவரும் நேற்று(18) இரவு கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.