முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஒருங்கிணைப்புச் செயலாளரான கீத்நாத் காசிலிங்கம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்குழு மற்றும் அரசியல் ப...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஒருங்கிணைப்புச் செயலாளரான கீத்நாத் காசிலிங்கம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்குழு மற்றும் அரசியல் பேரவை ஆகியவற்றுக்கு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற கட்சி மறுசீரமைப்பின் போது கீத்நாத் இந்த குழுக்களின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கீத்நாத் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டு குழுக்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ள தமிழ் பிரதிநிதி என்ற நிலையில், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் சமூகம் மத்தியில் கட்சியின் கொள்கைகளை வலுப்படுத்துவது தொடர்பில் செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீதநாத் காசிலிங்கம் இதற்கு முன்னர் மஹிந்த ராஜபக்சஷ பிரதமராக இருந்த போது வடக்கு மற்றும் கிழக்கில் புனர்வாழ்வு விவகாரங்களுக்கான பிரதமரின் விசேட பிரதிநிதியாக செயற்பட்டதுடன் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் பிரதமரின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.
இந்தநிலையில் பொதுஜன பெரமுனவின் செயற்குழு மற்றும் அரசியல் பேரவைக்கு நியமிக்கப்பட்ட இளம் உறுப்பினர்களில் இவரும் ஒருவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.