இலங்கையை பூர்வீகமாக கொண்ட நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். வீட்டில் திடீரென மயங்கி விழுந்த போண்டா மணி, க...
இலங்கையை பூர்வீகமாக கொண்ட நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
வீட்டில் திடீரென மயங்கி விழுந்த போண்டா மணி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி – அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்
நடிகர் போண்டா மணி, 1991ம் ஆண்டு வெளியான நடிகர் பாக்யராஜின் ‘பவுனு பவுனுதான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதனை தொடர்ந்து ‘சுந்தரா டிராவல்ஸ்’, ‘மருதமலை’, ‘வின்னர்’, ‘வேலாயுதம்’, ‘ஜில்லா’ உள்ளிட்ட 150க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார்