ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளதாக அறியமு...
ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனது எதிரிகளின் அரசியல் கருத்துக்கள் மற்றும் கொள்கைகளில் முரண்பாடுகள் காணப்படுகின்ற போதிலும் இலங்கையை சுபீட்சமான நாடாக கட்டியெழுப்பும் நோக்கில் ஒன்றிணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளதா என நேற்று (18) தென்னிலங்கை பத்திரிகையொன்றின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.