இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக பதவியேற்றுள்ள சிறீதரன் எம்.பி., பதவியேற்ற கையோடு புலிப் போராளிகளின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி ச...
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக பதவியேற்றுள்ள சிறீதரன் எம்.பி., பதவியேற்ற கையோடு புலிப் போராளிகளின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தியதை நேற்று பாராளுமன்றத்தில் சாடிய ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, நாட்டைப் பிரிக்கும் கொள்கையில் இருந்து தமிழரசுக் கட்சி மாறவில்லையென்றும் சிறீதரனும் அதனையே செய்ய முயற்சிப்பதாகவும் சாடினார்.
நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டமூல விவாதத்தில் நேற்று உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலை வராக பொறுப்பேற்றுள்ள சிறீதரன், பதவியேற்ற கையோடு முதலில் புலிகளின் நினைவிடத்துக்குச் சென்றார். புலிகள் நாட்டைப் பிரிக்க போராடினார்கள். அதனால் அவர் அங்கு செல்வது தவறு. நாட்டைப் பிரிப்பதே அவர்கள் விருப்பமாக இருக்கிறது. அரசியலமைப்பின்படி பாராளுமன்ற உறுப்பினர்களாக சத்தியப் பிரமாணம் செய்யும்போது நாட்டைப் பிரிக்க துணைபோகமாட்டோம் என்று உறுதிமொழி எடுக்கிறார்கள். ஆனால், அவர்கள் நடந்துகொள்வது தவறானதாக இருக்கிறது. புலிகளின் நினைவிடத்துக்கு அவர் முதலில் செல்வது என்ன அர்த்தம்? நாட்டைப் பிரிப்பதே அவர்களின் தீர்மானம். சிறீதரனும் அதனையே செய்கிறார்’’ என்றார் சரத் வீரசேகர எம்.பி.