மாத்தறை – பெலியத்தை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 54 வயதுடையவரே இவ்வாற...
மாத்தறை – பெலியத்தை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
54 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்தை – கஹவத்த வெளியேறும் பகுதிக்கு அருகில், கடந்த 22 ஆம் திகதி இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு 5 பேர் கொல்லப்பட்டனர்.
தாக்குதலை நடத்திய சந்தேகநபர்கள் பயணித்த வாகனம் சென்ற வீதிகளை பொலிஸார் அடையாளம் கண்டனர்.
துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அவர்களில் ஒருவர் கம்புருப்பிட்டி பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு அருகில் வாகனத்தில் இருந்து இறங்கும் சிசிடிவி காணொளி காட்சிகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர் தமது முதுகில் ஒரு பையை சுமந்து சென்றுள்ளதுடன் அவர் பயணித்த இடங்கள் குறித்த தகவல்களும் வெளியாகியுள்ள காணொளி காட்சிகளின் ஊடாக தெரியவந்துள்ளது.
அத்துடன் வாகனத்தில் இருந்து வெளியே வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், ஒரே நேரத்தில் 2 தோட்டாக்கள் வெளியேறும் வகையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.