பண மோசடியில் ஈடுபட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் உள்ளிட்ட ஆறு பேர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 15 ம...
பண மோசடியில் ஈடுபட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் உள்ளிட்ட ஆறு பேர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
15 மாணிக்கக் கற்களை வாங்கி விட்டு அதற்கு செலுத்த வேண்டிய 2 கோடி 87 இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பணத்தை சேமிப்பில் காணப்படாத வங்கி காசோலையை வழங்கி முறைகேடு செய்தமை, நம்பிக்கை மோசடி செய்தமை தொடர்பாக பொலிஸாரிடம் பாதிக்கப்படடவரால் முறைப்பாடு செய்யப்பட்டது.
சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கொழும்பில் வெள்ளிக்கிழமை (19) ஒருவரை கைது செய்தனர்
இதனை தொடர்ந்து மோசடி செய்த இருவர் உதவிபுரிந்த ஒருவர் என
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.