நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் (09) நாளையும் (10) மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும் என சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட்...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் (09) நாளையும் (10) மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும் என சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு, ஊவா ,மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் பொலநறுவை மாவட்டத்திலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என்றும் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் சூழ்ந்து காணப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை, பொத்துவில், ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய கனமழை: வட கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Today Weather Forecast In Srilanka
நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இதேவேளை, 30 - 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்கு அல்லது கிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும்.