விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டத்தினூடாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 104 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிக...
விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டத்தினூடாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 104 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு திங்கட்கிழமை (29) உடுவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
கடந்த ஆண்டு விற்பனை செய்யப்பட்ட அதிஸ்டலாப சீட்டு விற்பனை செய்த பணத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் செயற்றிட்டத்தில் ஒரு அங்கமாக இது முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் உடுவில் பிரதேச செயலாளர்பா.ஜெயகரன் ,உடுவில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர்ஜெ.றெமின்ரன்,உடுவில் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர்ம.இரட்ணேஸ்வரி, கிருபா சாரதி பயிற்சி பாடசாலை அதிபர் அ.கிருபாகரன் மற்றும் இளைஞர் சேவை உத்தியோகத்தர்கள் விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்ட குழுவினர் இணைந்து கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.
கருகம்பனை இந்து இளைஞர் கழகம் மற்றும் சித்திரமேழி பழணியானந்தன் சனசமூக நிலையம் ஆகிய இணைந்து முன்னெடுக்கும் விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டத்தினூடாக இணைந்துள்ள தன்னார்வ தொண்டர்கள் யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு கிழக்கு என பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகிறனர்.