நாட்டை பொருளாதார மாற்றத்திற்கு கொண்டு செல்ல உலகிற்கு ஏற்ற புதிய கல்வி முறைமை அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். போட்ட...
நாட்டை பொருளாதார மாற்றத்திற்கு கொண்டு செல்ல உலகிற்கு ஏற்ற புதிய கல்வி முறைமை அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
போட்டி நிறைந்த உலக சந்தையில் தேவைப்படும் நிபுணர்களை கல்வி முறையினால் உருவாக்க முடியும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
இலவச பாடசாலை பாடப்புத்தகங்கள் மற்றும் பாடசாலை சீருடைகள் வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
இவ்விழா (14) காலை கொள்ளுப்பிட்டி புனித அந்தோனியார் பெண்கள் கல்லூரியில் இடம்பெற்றது.
பரீட்சை சுமையை குறைத்து, ஆங்கிலம் மற்றும் தொழில்நுட்ப பாடங்களை கல்வியில் இணைத்து, வேலைக்கு ஏற்ற குழந்தைகளை உருவாக்க எதிர்பார்க்கிறோம் என்றும், புதிய தொழிற்கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.