வௌிநாடுகளுக்கு இலங்கை பெண்களை வீட்டு பணியாளர்களாக அனுப்புவதை முற்றாக நிறுத்துவதற்கான முன்மொழிவையும் அவசர திட்டத்தையும் வழங்குமாறு தொழிலாளர் ...
வௌிநாடுகளுக்கு இலங்கை பெண்களை வீட்டு பணியாளர்களாக அனுப்புவதை முற்றாக நிறுத்துவதற்கான முன்மொழிவையும் அவசர திட்டத்தையும் வழங்குமாறு தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அறிவித்துள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உயர் நிர்வாகம் மற்றும் உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களின் சங்கத்திடமும் அமைச்சர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
பெண்களை வீட்டு வேலையாட்களாக அனுப்புவதை நிறுத்திவிட்டு அதிக சம்பளம் பெறக்கூடிய திறமையான வேலை வாய்ப்புகளுக்கு மட்டுமே அனுப்ப வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
அதற்கமைவாக, வீட்டு பணியாளர்களாக வெளிநாட்டு வேலைகளுக்கு அனுப்புவதை முற்றாக நிறுத்தும் வகையில், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் தொடர்பு கொண்டு யோசனைகளை தன்னிடம் சமர்பிக்குமாறு அனுமதி பெற்ற வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் சங்கத்துடன் நேற்று(21) இடம்பெற்ற கலந்துரையாடலில், அமைச்சர் அறிவித்துள்ளார்.