எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் உள்ளிட்ட குழுவினர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ. எல். ...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் உள்ளிட்ட குழுவினர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தற்போது ஜி. எல். பீரிஸ் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஏனைய உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.