மதுபானங்களின் விலை குறைக்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (21) உரையாற்றிய ...
மதுபானங்களின் விலை குறைக்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் மதுபானங்களின் விலை அதிகரிக்கப்பட்டதால் சட்டவிரோத மதுபான உற்பத்திகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
அத்துடன், பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டு மக்கள் கடந்த மூன்று ஆண்டு காலமாக மகிழ்ச்சியுடன் பண்டிகைகளை கொண்டாடவில்லை எனவும், நாடு தற்போது பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டுள்ள நிலையில், இம்முறை சித்திரை புத்தாண்டை மகிழ்வுடன் கொண்டாட மதுபானங்களின் விலைகளைக் குறைக்க வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.