ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள அரங்கில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்...
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள அரங்கில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது. 145 பேர் காயமடைந்துள்ளனர்.
மொஸ்கோ தாக்குதலுடன் தொடர்புடைய 04 துப்பாக்கிதாரிகள் உள்ளிட்ட 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் மொஸ்கோவில் உள்ள திரையரங்கில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மொஸ்கோவில் இருந்து கிடைத்த தகவல்களின் படி இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, இந்த தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் (António Guterres) கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதல் வெறுக்கத்தக்க மற்றும் கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலாகக் கருதப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.