வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா விதிமுறைகளை இந்த வாரம் முதல் கடுமையாக்க அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்...
வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா விதிமுறைகளை இந்த வாரம் முதல் கடுமையாக்க அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவுஸ்திரேலியாவிற்கு வந்துள்ள குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக சமீபத்திய தரவுகளின் பின்னணியில் அவர்கள் அந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.
குடியேற்றவாசிகளின் வருகை அதிகரிப்பால், நாட்டின் வாடகை வீட்டுச் சந்தையின் போட்டித்தன்மை எதிர்பாராத வகையில் வளர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
பட்டதாரி விசாக்கள் மற்றும் மாணவர் விசாக்களுக்கான ஆங்கில மொழித் தேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச மாணவர்களுக்கு உணவு வழங்கும் நிறுவனங்கள் தொடர்ந்து விதிகளை மீறினால் அவற்றை இடைநிறுத்துவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.