எல்லோரும் நாட்டுக்கு வரியை கட்டுகின்றோம் ஆனால் அரசு, பார்வை அற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் விசேட ஒதுக்கீடுகள் எவ...
எல்லோரும் நாட்டுக்கு வரியை கட்டுகின்றோம் ஆனால் அரசு, பார்வை அற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் விசேட ஒதுக்கீடுகள் எவையும் வழங்காமை வேதனைக்குரிய விடயம் என யாழ்ப்பாண மாவட்ட பார்வை அற்றோர் அறக்கட்டளையின் பொருளாளர் அப்புத்துரை கடம்பன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், குறிப்பாக சாதாரணமான விளையாட்டு கழகங்கள் செலவு நிலையங்கள் முன்பள்ளிகள் ஆலயங்கள் பாடசாலைகள் எல்லாவற்றிற்கும் பண்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒடுக்கப்படுகின்றன ஆனால் நாங்கள் இரண்டு தடவை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இந்த விடயத்தை முன்வைத்தும் இந்த விடயம் இன்னமும் கவனத்தில் கொடுக்கப்படவில்லை.இறுதியாக இடம் பெற்ற பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு என்று நாம் நம்பி இருந்தோம் ஆனால் வாக்குறுதிக்கு மாறாக எங்களுக்கு சாதகமான பதில் இதுவரை கிடைத்ததில்லை. அரச நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகளை வளப்படுத்தி வருவதில்லை. மக்கள் கூடுகின்ற இடங்களில் அல்லது மக்கள் தனவந்தரிடம் சென்று மாற்றுத்திறனாளிகள் நிர்வாக சபையினர் தங்களுடைய வேண்டுகோள்களை விடுத்து மாற்றுத்திறனாளுடைய அடிப்படை தேவைகளை நிறைவேற்றிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் எல்லோரும் நாட்டுக்கு வரியை கட்டுகின்றோம் பொருளாதாரங்களுக்கு எங்களை புறம்போக்கிதான் கணிக்கப்படுகின்றார்கள் இந்த நிலை மாற வேண்டும் என்று நாம் செல்கிறோம்.இந்த பார்வையற்றோர் அறக்கட்டளை நிலையம் ஏப்ரல் மாதம் இந்த மாதம் 15 ஆம் தேதி 16ஆம் தேதி தந்தை செல்வா திரையரங்கில் ஒரு திறன் விருத்தி கண்காட்சி நடத்த இருக்கிறது. இந்த நிகழ்விலே மக்கள் மாணவர்கள் அரச நிலை உத்தியோகத்தர்கள் இன்னும் ஏனைய ஆர்வலர்கள் அனைவரும் பங்கு கொள்ள வேண்டிய ஒரு சிறந்த நிகழ்வாக இது அமைய இருக்கின்றது.
இந்த நிகழ்வில் எல்லோரும் பங்கு கொண்டு சிறப்பிப்பது மட்டுமின்றி பார்வையள்றவர்களின் திறமைகளை உலகளாவிய ரீதியில் வெளிக்கொணர்வது தான் இந்த நிகழ்வின் நோக்கம். கைப்பணிகள் மற்றும் சுய தொழில் முயற்சிகள் அனைத்தையும் கணினி முயற்சிகள் கணினி கையாளுதல் முதலான பரதரப்பட்ட விடயங்கள் இந்த நிகழ்வில் ஊடாக வெளிப்படுத்த உள்ளோம் எங்களுடைய பார்வையற்றவர்கள் பார்வை குறைபாடு உடையவர்கள் குறிப்பாக விளையாட்டுத்துறையில் எந்த நிலையில் இருக்கின்றார்கள் என்றால் கிரிக்கெட் அணியில் கிரிக்கெட் விளையாட குடிய நிலையில் இருக்கின்றார். அதனைக் கூட காட்சிப்படுத்த இருக்கின்றோம் அப்படிப்பட்ட நிகழ்வினை எல்லோரும் வந்து பார்வையிடுமாறு வேண்டுவதற்காக தான் இன்று நாங்கள் இங்கே வருகை தந்திருக்கின்றோம், என அவர் மேலும் தெரிவித்தார்.