பாகிஸ்தானில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய இலங்கை மீண்டும் நடவடிக்கை எடுத்துள்ளது. வெங்காயம் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீ...
பாகிஸ்தானில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய இலங்கை மீண்டும் நடவடிக்கை எடுத்துள்ளது.
வெங்காயம் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியதையடுத்து, வெங்காயத்தை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சங்கத்தின் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் அடுத்த வாரத்தில் சந்தையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போதும் சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை குறைந்துள்ளதுடன், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் சந்தையில் 200 முதல் 300 ரூபா வரையிலான விலையில் கிடைப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவும் அண்மையில் பெரிய வெங்காய ஏற்றுமதிக்கான தடையை நீக்கியதுடன், இலங்கைக்கு பத்தாயிரம் மெட்ரிக் தொன் பெரிய வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய ஒப்புக்கொண்டது.
குறித்த பெரிய வெங்காயம் வர்த்தக அமைச்சின் ஊடாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு சதொச ஊடாக மக்களுக்கு விநியோகிக்கப்படும் என அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.