அநுராதபுரம் – மதவாச்சியில் 23 வயதான இளைஞர் ஒருவரின் ஆண் உறுப்பு பாதிக்கப்படும் வகையில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைத...
அநுராதபுரம் – மதவாச்சியில் 23 வயதான இளைஞர் ஒருவரின் ஆண் உறுப்பு பாதிக்கப்படும் வகையில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மதவாச்சி பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கு மதவாச்சி நீதவான் நிமேஷா தர்மதாஸ முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் மூவர் கைது செய்யப்படவுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் இன்று நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
சந்தேகநபரான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எதிர்வரும் 15 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்படவுள்ளார்