நாட்டில் நடத்தப்படவுள்ள தேர்தல்கள் தொடர்பில் வினவுவதற்காக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தேர்தலை நடத்துவது தொடர்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி ...
நாட்டில் நடத்தப்படவுள்ள தேர்தல்கள் தொடர்பில் வினவுவதற்காக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
தேர்தலை நடத்துவது தொடர்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் இதன்போது அமெரிக்க தூதுவர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் வினவியுள்ளார்.
அரசியலமைப்பினூடாக தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய எதிர்வரும் தேர்தல்கள் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐரோப்பிய ஆணைக்குழுவின் தூதுவர்கள், ஐக்கிய இராச்சிய உயர்ஸ்தானிகர்கள் உள்ளிட்ட பலரும் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களை சந்தித்து எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் கடந்த சில நாட்களாக கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.