திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறிய குற்றச்சாட்டில் சம்பூர் பொலிஸாரினால...
திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறிய குற்றச்சாட்டில் சம்பூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறிய குற்றச்சாட்டில் மூன்று பேரும் பல்கலைக்கழக மாணவி ஒருவருமாக நான்கு பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) சம்பூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மூதூர் நீதிவான் நீதிமன்ற உத்தரவுக்கமைய 27 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்கப்பட்டனர்.
நகர்த்தல் பத்திரம் மூலம் குறித்த வழக்கு மீண்டும் இன்று எடுக்கப்பட்டதுடன் பொலிஸார் பிணையை ஆட்சேபிக்காதநிலையில் நால்வரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இதேவேளை கஞ்சி காய்ச்சுவதற்காக மூதூர் நீதிமன்றினால் விதிக்கப்பட்ட தடை நேற்றைய தினம் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.