இந்தியன் ஒயில் நிறுவனம் வரலாற்றில் முதல் தடவையாக இலங்கைக்கு ஒக்டேன் 100 ரக பெட்ரோலை இறக்குமதி செய்கின்றது. ஒக்டேன் 100 ரக பெட்ரோல் அடங்கிய ம...
இந்தியன் ஒயில் நிறுவனம் வரலாற்றில் முதல் தடவையாக இலங்கைக்கு ஒக்டேன் 100 ரக பெட்ரோலை இறக்குமதி செய்கின்றது.
ஒக்டேன் 100 ரக பெட்ரோல் அடங்கிய முதலாவது கப்பல், இந்தியாவிலிருந்து கடந்த 18ம் திகதி இலங்கை நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
XP100 என இந்த பெட்ரோலுக்கு பெயரிடப்பட்டுள்ளது.
“இலங்கையில் புதிய சந்தைகளை வெற்றிகொள்வதற்காக எங்களின் மற்றுமொரு தயாரிப்பு களமிறங்கும் ஒரு முக்கியமான சந்தர்ப்பத்தை இது குறிக்கிறது.” என IOC நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவின் பணிப்பாளர் V.சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
XP100 என்ற பெட்ரோலானது, இந்திய தயாரிப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.