தமது இரண்டு மாத சந்தோஷம் எதிர்வரும் 15ஆம் திகதிக்கு பிறகும் தொடர இலங்கை இந்திய அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ் மாவட்ட கடற்றொழில் க...
தமது இரண்டு மாத சந்தோஷம் எதிர்வரும் 15ஆம் திகதிக்கு பிறகும் தொடர இலங்கை இந்திய அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ் மாவட்ட கடற்றொழில் கிராமிய அமைப்புகளின் தலைவர் செல்லத்துரை நற்குணம் கவலை தெரிவித்தார்.
யாழில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களை சந்தித்து கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,இந்தியாவில் மீன் பிடி தடைக்காலம் கடந்த இரண்டு மாதங்களாக இருந்தமையால், வடபகுதி கடற்றொழிலாளர்கள் மிகவும் சந்தோஷமாக தொழில் மேற்கொள்ள கூடியதாகவிருந்தது.
எதிர்வரும் ஜீன் 15ம் திகதி இந்தியாவில் மீன்பிடி தடைக் காலம் முடிவடையவுள்ளது, அதனால் மீண்டும் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழையலாம். எனவே இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி வராமல் இருக்க இரு நாட்டு அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
இது தொடர்பில் இலங்கை அரசாங்கம், கடற்றொழில் அமைச்சு, இலங்கை கடற்படை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேவேளை இந்திய பிரதமராக மோடி மீண்டும் தெரிவானமைக்கு தமக்கு மகிழ்ச்சியே என தெரிவித்தவர் இந்திய பிரதமர் இந்திய கடற்றொழிலாளர்களின் இழுவைமடிப் படகுகளை தடைசெய்ய வேண்டும் எனவும் கோரியுள்ளார்.