நாட்டில் தென்மேற்கு பகுதிகளில் பெய்துவரும் கடும் மழையுடனான வானிலை, நாளை முதல் (04) தற்காலிகமாக குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவிய...
நாட்டில் தென்மேற்கு பகுதிகளில் பெய்துவரும் கடும் மழையுடனான வானிலை, நாளை முதல் (04) தற்காலிகமாக குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும், மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களின் பல இடங்களில் இடைக்கிடை மழையுடனான வானிலையை எதிர்பார்க்க முடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு அறிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இன்னும் வெள்ள அபாயம் காணப்படுவதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.