யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பதில் அரச அதிபர்களிற்கு பிரதமர் தினேஷ் குணவர்தனவால் இன்றையதினம் நியமனக் கடிதம் வழங்கிவைக்ப்பட்டது. யாழ...
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பதில் அரச அதிபர்களிற்கு பிரதமர் தினேஷ் குணவர்தனவால் இன்றையதினம் நியமனக் கடிதம் வழங்கிவைக்ப்பட்டது.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட கடமை நிறைவேற்று அரச அதிபர்களாக இருந்த ம.பிரதீபன் மற்றும் எஸ்.முரளிதரன் ஆகிய இருவருக்குமே பதில் அரச அதிபராக பணியாற்ற அமைச்சரவை அனுமதி வழங்கிய நிலையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டது.
இருவரும் நாளையதினம் மாவட்ட செயலகங்களில் தமது கடமையை பொறுப்பேற்பர் என தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாண மாவட்ட செயலாளராக இருந்த அம்பலவாணர் சிவபாதசுந்தரம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட செயலாளராக இருந்த ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோர் ஓய்வு பெற்ற நிலையில் கடமை நிறைவேற்று அரச அதிபர்களாக ம.பிரதீபன் மற்றும் எஸ்.முரளிதரன் ஆகியோர் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாண மாவட்ட பதில் அரச அதிபர் ம.பிரதீபன்
கிளிநொச்சி மாவட்ட பதில் அரச அதிபர் எஸ்.முரளிதரன்