கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முச்சக்கரவண்டியில் வந்திறங்கினார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களின் வ...
கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முச்சக்கரவண்டியில் வந்திறங்கினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களின் விசேட கூட்டம் நேற்று (26) அத்துருகிரியவிலுள்ள சுதந்திரக் கட்சியின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகத்தில் இடம்பெற்றது.
அக்கூட்டத்திற்கே மைத்திரி முச்சக்கரவண்டியில் வந்திறங்கினார். இந்நிலையில் இது தொடர்பில் அங்கிருந்த ஊடகவியலாளர்கள் வினவிய போது,
தேர்தல் சட்டங்கள் அமுலில் உள்ளதால் அந்த சட்டங்களுக்கு மதிப்பளித்து அரச வாகனங்களைப் பயன்படுத்தாது முச்சக்கர வண்டியில் வந்ததாக தெரிவித்தார்.
அதோடு தேர்தல் சட்டங்களை அனைவரும் கடைப்பிடிப்பது நல்ல நடைமுறை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இந்த விசேட கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களின் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவும் கலந்துகொண்டார்.