இரண்டாம் இணைப்பு கொழும்பு – டாலி வீதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைகத்திற்கு முன்பாக பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந...
இரண்டாம் இணைப்பு
கொழும்பு – டாலி வீதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைகத்திற்கு முன்பாக பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர கட்சித் தலைமையகத்திற்கு வருகைத் தந்ததை அடுத்தே, அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
கொழும்பு – டாலி வீதியில் கடும் பொலிஸ் பாதுகாப்பு
கொழும்பு – டாலி வீதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைகத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவை கட்சித் தலைமையகத்திற்கு இன்று வருகை தருமாறு கட்சி ஆதரவாளர்கள் விடுத்த அழைப்பை அடுத்தே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்படக்கூடும் என்பதை அடுத்தே, பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளனர்.