டுபாயிலிருந்து கிடைத்த குத்தகையொன்றுக்கு அமையவே, சுரேந்திர வசந்த பெரேராவை (கிளப் வசந்த) தனது பச்சை குத்தும் அழகு நிலைய திறப்பு விழாவிற்கு அழ...
டுபாயிலிருந்து கிடைத்த குத்தகையொன்றுக்கு அமையவே, சுரேந்திர வசந்த பெரேராவை (கிளப் வசந்த) தனது பச்சை குத்தும் அழகு நிலைய திறப்பு விழாவிற்கு அழைத்ததாக, அந்த நிறுவனத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணை நடாத்திய போதே இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, பச்சை குத்தும் அழகு நிலைய உரிமையாளரின் வங்கி கணக்கிற்கு, டுபாயிலிருந்து 10 லட்சம் ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளமையும் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுரேந்திர வசந்த பெரேராவை (கிளப் வசந்த) கொலை செய்வதற்கு தான் உதவி புரிந்ததாக பச்சை குத்தும் அழகு நிலைய உரிமையாளர் ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கொலை சம்பவத்தின் பின்னணியில், கஞ்சிபானி இம்ரான் உள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
துப்பாக்கி சூடு நடாத்தப்பட்ட இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கி ரவைகளில் KPI என ஆங்கில எழுத்துகள் எழுதப்பட்டிருந்தன.
KPI என்பது க(K)ஞ்சிபா(P)னி இ(I)ம்ரான் என பொலிஸார்ஜசந்தேகிக்கின்றனர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.