அத்துருகிரிய பகுதியில் துப்பாக்கி பிரயோகத்தை நடாத்துவதற்காக சந்தேகநபர்கள் வருகைத் தந்த காரை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். கடுவளை – கொரதோட்டை...
அத்துருகிரிய பகுதியில் துப்பாக்கி பிரயோகத்தை நடாத்துவதற்காக சந்தேகநபர்கள் வருகைத் தந்த காரை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
கடுவளை – கொரதோட்டை பகுதியில் வைத்து இந்த காரை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
அத்துடன், பிரபல பாடகி சுஜீவா உள்ளிட்ட நால்வர் படுகாயமடைந்த நிலையில், பாடகி உள்ளிட்ட இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஏனைய இருவரும் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.