தமிழ்த்தேசிய தேரை முன்நோக்கி இழுத்து தமிழ் தேசிய திரட்சியை வெளிக்காட்ட தேக்க நிலையை உடைத்து புதிய அத்தியாயம் படைக்க முன்வருவோம் என ஒருங்கிணை...
தமிழ்த்தேசிய தேரை முன்நோக்கி இழுத்து தமிழ் தேசிய திரட்சியை வெளிக்காட்ட தேக்க நிலையை உடைத்து புதிய அத்தியாயம் படைக்க முன்வருவோம் என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு அகத்தியர் அடிகளார் அழைப்பு விடுத்தார்.
தமிழ் பொது வேட்பாளர் தொடர்பாக ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில்,முன்னாள் மட்டு நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் அவர்கள் அப்பழுக்கற்ற தமிழ் தேசியவாதி. தமிழ் தேசிய ஆயுதப்போராட்ட தலைமைத்துவத்தின் ஆசிர்வாதத்துடன் மக்கள் பிரதிநிதியாக பாராளுமன்றம் 2004 இல் புகுந்தவர்.
ஏற்கனவே நாம் அனைவரும் தெளிவாக உள்ளவாறு பொது வேட்பாளர் காலத்தின் தேவை. பொருளாதார பிரச்சனைகளில் தமிழரின் உரிமை பிரச்சனை கரைந்து போகக்கூடிய அபாயநிலையில் பொது வேட்பாளர் ஊடாக மீள தமிழர் தம் திரட்சியை காண்பிக்க வேண்டிய தேவை உள்ளது.
தமிழ் தேசிய பரப்பிலுள்ள கட்சிகள் சிவில் அமைப்புக்கள் இணைந்துள்ளது சிறப்பான விடயம் .
அதே நேரம் வேட்பாளர் ஊடாக தமிழரசுக்கட்சியும் அந்த களத்திற்கு வந்துள்ளது
ஏற்கனவே தாயக கோட்பாட்டின் அடிநாதமும் சமகாலத்தில் உச்சபட்ச சவால்கள் அனைத்து தரப்பிடம் எதிர்நோக்கியுள்ள கிழக்கு மண்ணிலிருந்து மீன் பாடும் தேன் நாடு தென் தாய்மண் மட்டக்களப்பிலிருந்து ஒருவர் முழு தமிழ் மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி தேர்வு செய்யப்பட்டமை பொதுக்கட்டமைப்பின் நடுநிலை பார்வையை உயர்த்தி உள்ளது
தமிழ்த்தேசிய தேரை முன்நோக்கி இழுத்து தமிழ் தேசிய திரட்சியை வெளிக்காட்ட தேக்க நிலையை உடைத்து புதிய அத்தியாயம் படைக்க முன்வருவோம் – என்றுள்ளது.